பங்களாதேஷின் புதிய பிரதமர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட சந்திப்பு

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் இலங்கையின் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் நேற்று(17) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, ​​இலங்கை அரசின் சார்பாக பங்களாதேஷின் புதிய பிரதமருக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அண்மையில் “டித்வா” புயலின் போது இலங்கைக்கு வங்கதேசம் வழங்கிய ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கு அதிகமான பங்களாதேஷ் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துதல் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடியும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *