அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் கலந்துரையாடல் ஒன்றை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று(18) மேற்கொண்டார்.
காலநிலை மாற்றத்தினால் மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி பெய்து வரும் நிலையில் அனர்த்த முன் ஆயத்தம், அனர்த்த முற்தடுப்பு நடவடிக்கைகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டன.
மேலும் டித்வா புயலின் போது அனர்த்த பாதிப்பு பிரதேசங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நிவாரண சேவைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் உத்தியோகத்தர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதி பணிப்பாளர் சியாத் மற்றும் மாவட்ட நிவாரண சேவை உத்தியோகத்தர் சுரேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் டித்வா புயலினால் 11 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 844 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *