கொழும்பு அருகே ஈரானின் மிலிட்டரி கப்பல்; அரசு உறுதி

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் ஈரானின் மற்றொரு போர்க்கப்பல் (மிலிட்டரி டாங்கர்) தற்போது நங்கூரமிட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
புஷெஹ்ர் எனும் பெயருடைய இந்த ஈரானிய இராணுவ டாங்கர் கப்பல், கொழும்பு துறைமுகத்தின் வெளி நங்கூரமிடப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில், அதாவது இலங்கையின் கடல் எல்லைக்குள் தங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தை மிக எச்சரிக்கையுடனும் மனிதாபிமான அடிப்படையிலும் கையாளுவதாகத் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகம் இந்த இரண்டாவது கப்பலை 24 மணிநேரம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *