பாகிஸ்தானில் இன்று(10) அதிகாலை 1:44 மணிக்கு 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

