யாழ்ப்பாணம் வடமராட்சியில் 350 கிலோகிராம் கஞ்சா இன்று மீட்பு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் 350 கிலோகிராம் கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் இராணுவ புலனாய்வுத்துறையுடன் இணைந்து 350 கிலோகிராம் கஞ்சா பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன் இலங்கை பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபா வரையென தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *