திருகோணலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் இறந்த உறுப்பினர்களை நினைவு கூறுவதற்கு 17 பேருக்கு மூதூர் நிதீமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக 25ஆம் திகதி மூதூர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அறிக்கையை பார்வையிட்ட மூதூர் நீதிமன்ற நீதவான் எச்.எம்.தஸ்னீம் பெளஷான் பொலிஸாரினால் பெயர் குறிப்பிடப்பட்ட 17 பேருக்கு எதிராக இத்தடை உத்தரவினை விதித்துள்ளார்.
மாவீரர்களை நினைவு கூற வேண்டாம் என சம்பூர் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அறிக்கைக்கு அமைவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்லவராசா கஜேந்திரன், சமூக ஆர்வலர் ரமேஷ் நிக்கலஸ் உட்பட்ட 17 பேருக்கு எதிராக மூதூர் நீதிமன்றம் தடைஉத்தரவை வழங்கியுள்ளது.
செய்தி நிருபர் திருமலை சூரியா

