கொழும்பு கொட்டாஞ்சேனை பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவந்த செல்வி அம்ஷிகா மீதான பாலியல் வன்கொடுமைக்கு நீதி கோரிய ஆர்ப்பாட்டம் இன்று(11) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இடம்பெற்றது.
மாணவி அம்ஷிக்காவின் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கோரியும் அவ் அப்பாவிக் குழந்தையின் உயிர்ப் பலிக்கு காரணமான ஆசிரியருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும், இனியும் இவளைப்போல் எந்த உயிரும் பலியாகக் கூடாது,
இப்படி பசுந்தோல் போர்த்தி அலையும் காமக் கொடூரன்களுக்காக அரசு தீவிரமான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளைமுன்வைத்து குறித்த போராட்டமானது இன்று மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இடம்பெற்றது.






