கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் இன்று(11) வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி – பூதர்மட ஒழுங்கை என்ற முகவரியைச் சேர்ந்த குணரத்தினம் குணாதரன் என்ற 41 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் இன்று வாந்தி எடுத்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

