7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று (01) ஜெய்ப்பூரில் 43 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ஓட்டங்களை குவித்தது.

 

துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அணி தலைவர் ரியான் பராக் 90 ஓட்டங்களை பெற்றார்.

 

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஜேமிசன், அக்சர் படேல், நடராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

226 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக கேல்.எல்.ராகுல் 75 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஆர்ச்சர், பர்கர் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *