எம்.எஸ். தோனி சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்தார்

ஐ.பி.எல். 2026 தொடரில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த வரவாக அமைந்துள்ளார். அவர் ஏற்கனவே ஐ.பி.எல். 2026 தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

 

இந்த வரிசையில் நேற்று (18) இரவு இடம்பெற்ற போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் கீப்பராக ஒரு சீசனில் எடுத்த அதிக ஓட்டங்களை பெற்றவர் என்ற எம்.எஸ். தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்தார்.

 

எம்.எஸ். தோனி 2013இல் 16 இன்னிங்ஸ் 461 ஓட்டங்களை எடுத்திருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 27 ஓட்டங்களை எடுத்த சாம்சன் நடப்பு ஐ.பி.எல். தொடரின் 13 போட்டிகளின் முடிவில் இதுவரை 477 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

 

சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 63 ஆவது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது.

 

துடுப்பாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 44 ஓட்டங்களை பெற்றார்.

 

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

181 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை அடைத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 70 ஓட்டங்களை பெற்றார்.

 

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முகேஷ் சாவித்திரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *