கிளிநொச்சியில் பாழடைந்த கிணற்றில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய குறித்த வனவள திணைக்கள அதிகாரி கிளிநொச்சி ஜெயபுரத்தில் இயங்கும் வட்டார வனவள திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த நபர் காணாமல் போயிருப்பதாக ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து நேற்று மாலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவரது சடலம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

இச் சம்பவம் தொடர்பில் ஜெயபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

41 வயதுடைய ஆராட்சி பண்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *