அம்பாறை மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமாக, நீச்சல் மற்றும் கராத்தே போட்டிகள் இன்று(07) அம்பாறை நகர சபை நீச்சல் தடாகத்திலும், உள்ளக விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றன.
இப்போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி நிகழ்வுகளில் பல்துறை சார்ந்த திறமையாளர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து வெற்றிகளைப் பெற்றுக்கொண்டனர்.

