வல்வெட்டித்துறையில் நாளை பெருந்திரள் போராட்டம்; மக்களுக்கு அழைப்பு

குரல்வளையை விலங்குடைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வல்வெட்டித்துறையில் நாளை(08) நடைபெறவுள்ள போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு வல்வெட்டித்துறை மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இப்போராட்டத்தை தடுக்க பொலிஸார் பல்வேறு அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருவதாகவும், ஏற்பாட்டாளர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதாக மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை மீறி போராட்டம் திட்டமிட்டபடி நாளை காலை 10.00 மணிக்கு வல்வெட்டித்துறை சந்திப் பகுதியில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *