ஜீன் மாதம் 09ம் திகதி – 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர்

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

 

யாழ். மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நிலையில் அதிக ஆபத்துள்ள கரவெட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் ஜீன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ஆம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வார நடவடிக்கைகள் செயற்படுத்தப்படவுள்ளன.

 

இதன்படி 09.06.2026ஆம் திகதி பொதுமக்களின் வீடுகள் மற்றும் சுற்றுச்சூழலிலும், 10.06.2026ஆம் திகதி மாவட்டத்தின் சகல அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும், 11.06.2026ஆம் திகதி பாடசாலை மற்றும் சகல கல்வி நிறுவனங்களிலும், 12.06.2026ஆம் திகதி வர்த்தக நிலையங்கள், சந்தைகள், மதஸ்தலங்கள் மற்றும் பொது அமைப்புகள் சிரமதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *