12 அணிகள் களத்தில்: மகளிர் டி20 உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்

மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 9 முறை நடந்துள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 6 முறை அவுஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

 

கடைசியாக 2024 ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

 

10 ஆவது மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (12) தொடங்க உள்ளது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

 

மொத்தம் 12 அணிகள் 2 பிரிவுகளாக விளையாட உள்ளன. இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன.

 

இதில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும். அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *