தீ அனர்த்தங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தீ அனர்த்தத் தடுப்பு மற்றும் தீ பரவலைக் கட்டுப்படுத்தும் முறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

 

தற்போது நிலவும் வறட்சி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பல பகுதிகளில் தீ அனர்த்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது மற்றும் தீ பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவூட்டல் இச்செயலமர்வின் மூலம் வழங்கப்பட்டது.

 

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வை யாழ்ப்பாண மாநகர தீயணைப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் நடத்தினர்.

 

இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம். அழகக்கோன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

தீ அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசரகால பதிலளிப்பு முறைகள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *