தேசிய நல்லிணக்கம் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட சமூக மட்ட அமைப்புகளுக்கு தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல் இன்று(19) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள் க. இளங்குமரன் மற்றும் செ. திலகநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள், விசாரணை நடவடிக்கைகள் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், பங்கேற்பாளர்களின் கருத்துக்களும் பெறப்பட்டன.

