கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் புதிதாக 24 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று(22) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர், கரைச்சி, பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர் மற்றும் கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

