புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28.06.2026) உடைந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று (09) மாலை முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து இன்று (10) காலை 9 மணி அளவில் மீண்டும் மக்களின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

 

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் இந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள் பாலத்திற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள வீதி அறிவுறுத்தல்களை பின்பற்றி இப் பாலத்தின் ஊடாக மிகவும் அவதானமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை நிரந்தரமாக புதிய பாலம் ஒன்று அமைக்கும் வரை கனரக வாகனங்கள் இப்பாதையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

 

இப்பாலத்தை மிக விரைவாக புனரமைத்து, மக்களின் இயல்பு போக்குவரத்தை மீட்டெடுப்பதற்காக இரவும் பகலும் அர்ப்பணிப்புடன் உழைத்த மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அதாவது, இந்த அவசரப் பணியில் பங்கெடுத்த சகல அரச அதிகாரிகள், பொறியியலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பிரதேச மக்களுக்கு தமது நன்றியையும் பாராட்டுகளையும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *