தன்னைத்தானே காயப்படுத்திய ஆண் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தைத் தானே பிளேற்றினால் வெட்டி தற்கொலை செய்ய முயற்சித்த ஆண் ஒருவரை பொதுமக்கள் பொலிசாருடன் மீட்டு வைத்தியசாiலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று(10) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

குறித்த பாலத்தில் சம்பவ தினமான இன்று பகலில் திடீரென வீதியில் வந்த ஆண் ஒருவர் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிவிட்டு பிளேற்றினால் தனது கழுத்தை தானே வெட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததையடுத்து வீதியால் வந்த பொதுமக்கள் பொலிசார் இணைந்து குறித்த நபரை பிடித்து கை கால்களை கட்டி 1990அம்புலன்சில் ஏற்றி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 

குறித்த நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய மகேந்திரன் அருள் எனவும் மனநோய் கொண்டவர் எனவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *