கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம்பொக்கணை கமநலசேவை பிரிவிற்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் இறுங்கு அறுவடை விழா மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து சிறுதானிய செய்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தர்மபுரம் பகுதியில் இறுங்கு அறுவடை விழா இன்று(10) கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் வி.சோதிலச்சுமி தலைமையில் இறுங்கு அறுவடை விழா நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட விவசாய பணிப்பாளர் கூறுகையில் தற்போதைய காலத்தின் தேவையாக சிறுதானிய செய்கையை ஊக்குவிப்பதுடன் சிறுதானிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் தொற்றா நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளவும் குறைந்த செலவில் கூடிய இலாபத்தை பெறக்கூடிய சிறுதானியத்தை அனைவரும் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் விவசாயிகள் பலர் தாமாகவே முன்வந்து சிறுதானிய செய்கையிலே முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். சிறுதானிய செய்கையாளருக்காக ஊக்குவிப்புத் தொகையாக 15000 ரூபா பணமும் வழங்கப்படுவதுடன் சிறுதானிய செய்கைக்கான உள்ளீடுகளும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த நிகழ்வில் விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர், விவசாய போதனா ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் செய்கையாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

