மட்டக்களப்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வு சிரமதானம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த தாய்வான் நாட்டின் வை.எம்.சி.ஏ. இளைஞர், யுவதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வை.எம்.சி.ஏ. இளைஞர், யுவதிகள் இணைந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு சிரமதானப் பணியை மட்டக்களப்பு நகரில் முன்னெடுத்தனர்.

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் குவிந்திருந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

 

இந்நிகழ்வின் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டைக் குறைப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதுடன், சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான சமூகப் பொறுப்புணர்வையும் ஊக்குவிப்பதே நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *