கல்லடி மெதடிஸ்த திருச்சபையினுடைய ஆண்டு விழாவை முன்னிட்டும், வாழைத்தோட்ட திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழாவை முன்னிட்டும், கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் நேற்று(20) கல்லடி மெதடிஸ்த தேவாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது மெதடிஸ்த திருச்சபையினுடைய மூதூர் வாகரை சேகரத்தினுடைய முகாமைக்குரு அருட்பணி கந்தையா ஜெகதாஸ் தலைமையிலும், கல்லடி மெதடிஸ்த திருச்சபையினுடைய குருவானவர் அருட்பணி மோகன் ராம்கியின் பங்குபற்றுதலிலுடனும் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமிலே பல இளையோர்கள் கலந்து கொண்டு, ஆர்வத்துடன் தமது குருதியினை வழங்கியிருந்தார்கள். இந்த இரத்ததான முகாமினை மூதூர் வைத்தியசாலையினுடைய இரத்த வங்கி பொறுப்பதிகாரி, வைத்திய கலாநிதி எம்.டி.எஸ். சரத் தலைமையிலான குழுவினர் இரத்ததான முகாமை நடாத்தியிருந்தார்கள்.
அத்துடன், ஈச்சிலம்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சியாமினி சரத்தும் இதிலே கலந்து கொண்டார்.
இந்த இரத்ததான முகாமினுடைய சிறப்பு என்னவென்றால், கல்லடி வெருகல் பிரதேசத்திலே முதன்முதலாக நடத்தப்பட்ட இரத்ததான முகாமாகும். அத்தோடு, மெதடிஸ்த திருச்சபையினுடைய மூதூர் வாகரை சேகரத்தினுடைய திருப்பணி வரலாற்றில் முதன்முதலாக நிகழ்த்தப்பட்ட இரத்ததான முகமாகவும் இது அமைகிறது.


