புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலயம் திறப்பு

மூதூர் வாகரை சேகரத்தின் வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா நேற்று (25) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வானது மெதடிஸ்த திருச்சபையினுடைய மூதூர் வாகரை சேகரத்தினுடைய முகாமைக்குரு அருட்பணி கந்தையா ஜெகதாஸ் உடைய தலைமையிலும், கல்லடி மெதடிஸ்த திருச்சபையினுடைய குருவானவர் அருட்பணி மோகன் ராம்கியுடைய பங்குபற்றுதலிலும் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருப்பேரவைத் தலைவர் பேரூட்திரு.கிங்ஸ்லி வீரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நீண்ட காலமாக பிரதேச மெதடிஸ்த கிறிஸ்தவ மக்களுக்கான மத வழிபாட்டுஸ்தலம் இல்லாத நிலையில் தற்காலிக கொட்டிலில் செயற்பாட்டுவந்த நிலையில் நேற்று இவ் திருச்சபை வார வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசேட ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *