40 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

40 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வதுரம்முல்ல, சேசத மாவத்தையைச் சேர்ந்த நபராவார்.

சந்தேகநபர் சேசத மாவத்தையில் சென்று கொண்டிருந்தபோது பொலிஸ் குழுவொன்றினால் சோதனையிடப்பட்டதில், அவரிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டபோது அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 190 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாணந்துறை ‘குடு நிலங்க’ தரப்பினரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் இதற்கு முன்னர் 7 முறை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *