இங்கிலாந்திடம் மீண்டும் தோல்வியடைந்த இலங்கை

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபது20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு கார்டிஃபிலுள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சௌத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் இருபது20 போட்டியைத் தொடர்ந்து, இலங்கை அணி நேற்று சுமார் 3 மணி நேர பேருந்துப் பயணத்தின் பின்னர் கார்டிஃபை சென்றடைந்தது. இதனால் போட்டிக்கு முன்னதாக வழக்கமான முழுமையான பயிற்சியை மேற்கொள்ள போதிய நேரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், வீரர்களுக்குக் கிடைத்த குறுகிய நேரத்தை பயன்படுத்தி, இன்று காலை இலங்கை அணி வரையறுக்கப்பட்ட பயிற்சி அமர்வில் ஈடுபட்டுள்ளது.

கார்டிஃபில் நிலவும் குளிரான காலநிலை இலங்கை வீரர்களுக்கு சவாலாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், போட்டிக்கு முன்னதாக குறைந்தபட்ச தயார்படுத்தலை மேற்கொள்ளும் வகையில் இலங்கை அணி பயிற்சியை முன்னெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *