ஓட்டமாவடியில் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

தனது வீட்டில் வசித்து வந்த பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணச் சம்பவம் இன்று(15) காலை வேளையில் தெரியவந்துள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 1 ஆம் வட்டாரம் பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்னொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *