இந்தோனேசியாவின் சும்பாவா (Sumbawa) பிராந்தியத்திற்கு அருகில் இன்று (04) 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் உருவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

