விசுவமடுவில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு

கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு நாளில் எமது உறவுகள் கொத்து கொத்தாக செத்து மடிந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளின் ஆறாவது நாள் விசுவமடு சுண்டைகுளம் சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வை முன்னெடுத்தனர்.

இதன் போது இறந்த உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு  அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *