நாட்டில் இந்த ஆண்டு இதுவரை டெங்கு காய்ச்சலால் 79 பேர் உயிரிழந்துள்ளதுடன், மொத்தமாக 103,565 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பதிவான மொத்த நோயாளர்களில் 52.19 சதவீதமானோர், அதாவது 54,046 பேர் மேற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 21,828 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

