குருநாகல், வெல்லவ பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள், ரயிலுடன் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதிரவலான பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

