மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு!

மட்டக்களப்பு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 61 வயதுடைய விவசாயி ஒருவர் நேற்று புதன்கிழமை (21) இரவு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு கொடுவாமடு பங்குடாவெளி நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய  வல்லிபுரம் கணேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விவசாயி கொடுவாமடு வயல் பிரதேசத்திலுள்ள தனது நெல் வயலுக்கு காவல் காப்பதற்காக சம்பவ தினமான நேற்று இரவு வீட்டில் இருந்து வயலுக்கு சென்று காவல் காத்துக் கொண்டிருந்த போது குறித்த வயல் பகுதிக்குள் யானை  உள்நுழைந்த நிலையில் விவசாயி மீது தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த பகுதியில் உள்ள சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *