பலத்த மின்னல் தாக்கம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (22) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை முற்பகல் 01.30 மணி வரை செல்லுபடியாகும்.

இதற்கமைய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *