இன்றைய வானிலை!

இன்றைய தினம் (26) குறித்த குறைந்த தாழமுக்கம் ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. அத்துடன் தாழமுக்கம் இந்தியாவை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த மழை பெய்யும்.

பல இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றானது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசும்.

 

மத்திய மலைநாட்டில் மண்சரிவு அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் ராஜாங்கனை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *