இன்றைய வானிலை!

 

வங்காள விரிகுடாவின் மத்திய மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த “அர்னாப்” (Arnab) அதிதீவிர சூறாவளிப் புயல், தற்போது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்து வருகிறது. இதன் காரணமாக, இலங்கையின் வானிலையில் இந்தப் புயலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துள்ளது.

 

மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

 

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய உள்ளூர் ரீதியிலான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *