வவுனியாவில் 5 சாரதிகள் போதைப்பொருள் பாவனையில் அடையாளம்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பேருந்து சாரதிகளின் போதைப்பொருள் பாவனையை கண்டறியும் பரிசோதனை இன்று (28) நடத்தப்பட்டுள்ளது.

 

இதன்போது போதைப்பொருள் பயன்படுத்திய 5 சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரான இந்திக்க கப்புக்கொடவின் வழிகாட்டலில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்தின் பங்களிப்புடன் குறித்த பகுதியில் சாரதிகளிடையே இந்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

இன்று காலை 10 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகளின் 65 சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 5 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பேருந்துப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், விபத்துக்களை குறைக்கும் நோக்கிலும் சாரதிகளை பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை இன்று நாள் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *