இன்றைய நாளுக்கான ராசிபலன்!

மேஷம்: இன்று சில காரியங்களில் தடைகள் ஏற்பட்டு மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரவு திருப்தியளிக்கும். மாணவர்கள் வாக்குவாதங்களைத் தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்: இன்று எதிர்பாராத தடைகள் காரணமாக மனஅழுத்தம் ஏற்படலாம். பணவரவு சீராக இருக்கும். மாணவர்கள் பிறருடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நிதானமான அணுகுமுறை நன்மைகளைத் தரும்.

மிதுனம்: இன்று எதிர்பார்த்ததைவிட பணவரவு அதிகரிக்கும். பேச்சுத்திறமையால் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தினருடன் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதையும் சமாளிக்கும் மனவலிமை கிடைக்கும்.

கடகம்: இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறிய தடைகள் ஏற்படலாம். கூட்டாளிகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தர்கள் கூடுதல் பொறுப்புகளுடன் பணியாற்ற வேண்டியிருக்கும்.

சிம்மம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன், மனைவிக்கிடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும். குடும்ப உறவுகளில் அன்பும் அமைதியும் மேலோங்கும்.

கன்னி: இன்று சாதுரியமான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். சூழ்நிலையைப் புரிந்து செயல்படுவது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கவனச்சிதறல்களைத் தவிர்ப்பது அவசியம்.

துலாம்: இன்று புதிய முயற்சிகளைத் தொடங்குவதைத் தள்ளிப்போடுவது நல்லது. சில காரியங்களில் தாமதமும் அலைச்சலும் ஏற்படலாம். இருப்பினும் தடைகள் படிப்படியாக நீங்கி சாதகமான பலன்கள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: இன்று எதிர்ப்புகள் விலகி சாதகமான சூழல் உருவாகும். பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். நீண்டகாலமாக இருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

தனுசு: இன்று தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாகப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தர்களுக்குப் பணிச்சுமையும் அலைச்சலும் இருந்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்: இன்று குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பிள்ளைகள் தொடர்பான விடயங்களை நிறைவேற்ற சில அலைச்சல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

கும்பம்: இன்று செயல்களில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவார்கள்.

மீனம்: இன்று புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. சில காரியங்களில் தாமதமும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *