இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும்‌ பல்கலைக்கழக ஆசிரியர்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

அனைத்து அரசுப் பல்கலைக்கழக அமைப்புகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அச்சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.

அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான அதிக பணிச்சுமை, போதுமான பௌதிக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்குச் இணையாக நாளை பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனத்தினால் பேரணி ஒன்றையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசுப் பல்கலைக்கழக அமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *