மேஷம்: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம். குடும்ப நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம்: எதிர்பாராத பயணங்கள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து நிதானமாகச் செயல்படுவது நல்லது. காரியங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
மிதுனம்: மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகி, எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியுடன் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்: பயணங்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் திட்டமிட்டு செயல்படுங்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் ஆர்டர்களும் கிடைக்கலாம்.
சிம்மம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிலுவைப் பணம் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.
கன்னி: எதிர்பார்த்த உதவிகள் கிடைத்தாலும் புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம். தொழிலில் போட்டிகள் அதிகரிக்கலாம். பணிச்சுமையால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்: நீண்டதூரத் தகவல்கள் சாதகமாக அமையும். புதிய நட்புகள் உருவாகலாம். தொழில் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படக்கூடும். பணிச்சுமையைச் சமாளிக்கத் திட்டமிடுவது நல்லது.
விருச்சிகம்: உத்தியோகத்தில் சாதுரியமாகச் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். குடும்ப உறவுகளில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்படலாம்.
தனுசு: குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் பேச்சுத் திறனால் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்வது நன்மை தரும்.
மகரம்: நிலுவைப் பணம் கைக்கு வந்து சேரும். வாகனம் மற்றும் வீடு தொடர்பான பொருட்களை வாங்கும் முயற்சிகள் கைகூடும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
கும்பம்: பணவரவில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இணக்கமான சூழல் நிலவும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். புதிய வேலை முயற்சிகள் சாதகமாக அமையும்.

