சீனாவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

சீனாவில் இன்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இலங்கை நேரப்படி காலை 6.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமியின் உட்பகுதியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

32.592° வடக்கு அட்சரேகை மற்றும் 94.291° கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எனினும், உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *