முள்ளிவாய்க்கால் வாரத்தின் இறுதி நாளாகிய நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்குக் கிழக்கில் இடம்பெறவுள்ளது.
இந் நிலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தலும் சர்வமதப் பிரார்த்தனையும் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நாளை(18) கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இன அழிப்புப் போரில் உயிரிழந்த உறவுகளை நினைவேந்தும் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினர் கேட்டுக்கொள்கின்றனர்.


