இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அநீதியை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூர்ந்து இந்துக்கள் சமயக் கிரியைகளில் ஈடுபடும் இத்திருநாளின் உண்மையான அர்த்தம், வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கு அப்பால் சென்று, மனித இதயங்களில் அன்பு, கருணை மற்றும் சகோதரத்துவத்தின் ஒளியை ஏற்றி வைப்பதாகும்.
வெறுப்பிற்குப் பதிலாக கருணையையும், பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும் தேர்ந்தெடுத்து, மேலும் சிறப்பான மற்றும் பரிவுமிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியை புதுப்பித்துக் கொள்வதற்கு தீபாவளிப் பண்டிகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து சமய மற்றும் கலாசார அடையாளங்களையும் மதிக்கும், அனைவரையும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய பொறுப்பிற்காக அரசு உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது.
பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மீண்டும் வலுப்பெற்று, உலகிற்கு முன்னால் கௌரவத்துடன் நிமிர்ந்து நிற்கும் “அமைதி மற்றும் மனிதநேயத்தின் நாடாக” இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றாகப் பயணிக்கும் இந்தப் பாதையானது, தீபாவளி நாளில் ஏற்றப்படும் தீபங்களின் ஒளியால் மேலும் ஒளிரட்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

