GovPay பெயரில் போலி SMS மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

GovPay என்ற பெயரில் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்தி (SMS) சேவை தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் வேகக் கட்டுப்பாட்டை மீறியமைக்கான அபராதத்தைச் செலுத்துமாறு கோரி தற்போது மக்களுக்குச் சில குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

அத்துடன் அனுப்பப்படும் GovPay இணைப்பு முற்றிலும் போலியானது மற்றும் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இணைய வழிக் குற்றத்திற்காக அது பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இணைப்புகள் வழியாக எந்தவொரு அபராதத்தையும் செலுத்துமாறு GovPay அதிகாரப்பூர்வ தளத்தின் ஊடாக குறுஞ்செய்திகளையோ அல்லது அறிவிப்புகளையோ அமைச்சு அல்லது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுப்பவில்லை என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே இந்த இணைப்புகள் மூலம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி கணக்குத் தரவுகளை நுட்பமாகப் பெற முயற்சி செய்யப்படுவதால், இதுபோன்ற செய்திகளுக்குப் பதிலளிப்பதையோ அல்லது அத்தகைய இணைப்புகளைப் பார்வையிடுவதையோ தவிர்க்குமாறு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கம் அல்லது சட்ட நிறுவனங்களின் பெயரில் வரும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அறிவிப்புகள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சேவைகளைப் பெறும்போது அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை (gov.lk) மட்டுமே பயன்படுத்துமாறும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *