இன்றைய ராசி பலன்!

மேஷம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ரிஷபம்:

காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்ய நேரிடும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்:

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது.

கடகம்:

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்:

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது.

கன்னி:

அதிர்ஷ்டகரமான நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அதன் காரணமாக கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.

விருச்சிகம்:

தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

மகரம்:

இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். மாலையில் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

கும்பம்:

எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவுகளை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.

மீனம்:

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *