ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி ஒரு கிலோகிராமுக்கு 100 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மாசி(கருவாடு) மீதான வரி ஒரு கிலோகிராமுக்கு 302 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும், அரைத்த மற்றும் அரைக்காத உலர்ந்த மிளகாய் மீதான வரி ஒரு கிலோகிராமுக்கு 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், குறித்த உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

