இன்றைய ராசி பலன்!

மேஷம்:

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.

ரிஷபம்:

மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

சாதிக்கவேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளில் நன்றாக சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.

கடகம்:

பல வகைகளிலும் அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுப்பிடித்துச் செல்லவும்.

சிம்மம்:

சிந்தித்து செயல்படவேண்டிய நாள். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.

கன்னி:

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

துலாம்:

செலவுகள் அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். முக்கிய முடிவு எடுப்பதில் அவசரம் வேண்டாம்.

விருச்சிகம்:

எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.

தனுசு:

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இளைய சகோதரர்கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

மகரம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். அதிகாரிகள் கண்டிப்பாக நடந்துகொள்வார்கள்.

கும்பம்:

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

மீனம்:

பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். நீண்டநாள்களாக தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது உற்சாகம் தரும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *