அநுராதபுரத்தில் சுற்றிவளைப்பு – சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு!

அக்போ யானையின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் அநுராதபுரம் திறப்பனை பகுதியை அண்மித்த இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்தி, காட்டு யானைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய ‘ஹஸ்தி சேனா’ திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வனவிலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் அனுமதியற்ற துப்பாக்கிகள், ஹக்கபட்டஸ், பொறிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கற்குளம், கெட்டமாலாகந்த, முரியாக்கடவல, பெரியமியைங்குளம், கிரிந்தேகம மற்றும் வண்ணான்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோத வேட்டையாடல்களைக் கட்டுப்படுத்துவதுடன், மனித – யானை மோதலைக் குறைத்து இருதரப்பினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *