மாவீரர்களை நினைவுகூர தமிழர்களுக்கு ஏன் தடை? – சபையில் கரேந்திரகுமார் கேள்வி!

கார்த்திகை மாதம் என்பதால் தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் ஒரு மாதம். அவ்வகையான ஒரு மாதத்தில் அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நினைவு கூரும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

அது நடைபெற வேண்டிய ஒரு நிகழ்வாகும். நினைவு கூருவது அனைத்து மக்களுக்கு இருக்க உரிமையாகும். அதை யாராக இருந்தாலும் அதை எவரும் தடுக்க முடியாது. ஜே.வி.பி ஆயுதம் ஏந்தி போராடியது.

அந்த போராட்டத்தின் சரி-பிழையை விவாதிக்கவில்லை.அந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். அன்றைய அரசாங்கம் அதை பயங்கரவாத போராட்டம் என கொச்சைப்படுத்தியது. தடைசெய்யப்பட்ட அமைபாகவும் இருந்தது.

அந்த அமைப்பின் மாவீரர்களை நினைவு கூருவதற்கு அந்த அமைப்புக்கு உரிமை இருக்கிறது. அதேபோல் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர் நீத்த உறுப்பினர்களை நினைவு கூருவதற்கும் உரிமை இருக்கிறது.

ஆனால் அந்த உரிமை திட்டமிட்ட முறையில் முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது.

முன்னாள் போராளி மாலதி அக்காவின் நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் வழக்குகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *