ரோஹிங்கியா இனப்படுகொலை: மியன்மார் இராணுவத்துக்கு சர்வதேச நீதிமன்றம் கண்டனம்!

மியன்மாரில் வாழும் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக 2017ஆம் ஆண்டு அந்நாட்டு அரசுப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இனப்படுகொலை நோக்கம் இருந்ததாக சர்வதேச நீதிமன்றம் (ICJ) தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளின் போது, ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், பெண்களுக்கு எதிராகப் பரவலான பாலியல் வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

2017ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இதன்போது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதும் பாலியல் வன்முறைகள் மற்றும் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுக்கள் அறிக்கையிட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *