ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: உயர் நீதிமன்ற தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த நவம்பர் 9ஆம் திகதி இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.

குறிப்பாக சந்தேகநபர் ஒருவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்கும் ஏற்பாட்டை 48 மணித்தியாலங்களாகக் குறைத்தல் உள்ளிட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருந்தன.

மேலும் மதுவரிக் கட்டளைச் சட்டம் மற்றும் உடலில் பச்சை குத்துதல் அல்லது அடையாளங்கள் தொடர்பான சில ஏற்பாடுகளை நீக்கவும் முன்மொழியப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டுஇ சட்டமூலத்தைத் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *